222 திருத்தலங்கள் வகைப்பாடு பற்றிய விளக்கம்
1.முருகப்பெருமானின் அறுபடைவீடுகள் மிகவும் பிரசித்தம். தம்ழ்நாட்டில் ஆங்காங்குள்ள இதர முருகன் தலங்களிலும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தம் திருத்தல யாத்திரையில் பாடல்களை அருளி அவற்றுள் சில தலங்களை முருகப்பெருமானின் படைவீடாகவும் சிலவற்றைத் தனித்த தலவரிசையிலும் வைத்துப் பாடியுள்ளார். முதற்பிரிவில் படைவீட்டுப் பதிகம், படைவீட்டுத் திருப்புகழ் பெற்ற தலங்கள் 34 உள்ளன. மற்ற பாடல்களும் அந்தந்த அடைவிலே இருந்தாலும் படைவீட்டுப் பதிகமும், படைவீட்டுத் திருப்புகழும் பெற்ற தலங்கள் முதற் பிரிவாக அமைகின்றது. ஏறத்தாழ 5700 பாடல்கள் உள்ளன. திருவண்ணாமலைத் தலத்தில் வரும் சிவன் பதிகம், சக்தி பதிகம், சிவன் பதிற்றுப்பத்தந்தாதி, நீங்கலாக அனைத்தும் முருகப்பெருமானின் தோத்திரப் பாடல்களே! ஆயிரம் பாடல்களுக்கு மேல்பாடப்பட்டுள்ள, திருச்செந்தூர், பழனி, திருவண்ணாமலை ஆகியனவும் இப்பட்டியலில் அடங்கும். சுவாமிகளைப் பொறுத்தமட்டில் திருச்செந்தூரே முதற் படைவீடு.
2. ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடப்பெற்ற இதர நான்கு தலங்களோடு சென்னையும் சேர்த்து- ஐந்து தலங்களாக இரண்டாம் பிரிவிலும் சண்மதத் துதிகள் பெற்ற 44 தலங்கள் மூன்றாம் பிரிவிலும், சிவன் - திருமால் பதிகங்கள் பெற்ற ஒன்பது தலங்கள் நான்காம் பிரிவிலும் அமைந்துள்ளன. திருமால் பிரபந்தங்கள் மட்டும் உடைய 16 தலங்களும் ஐந்தாம் பிரிவிலும் உள்ளன. (ஆயிரம் பாடல்களைப் பெற்ற திருவரங்கம் இரண்டாம் பிரிவில் இடம்பெற்றுள்ளது)
3. கணபதி துதிகள் பிரதானமாக உள்ள16 தலங்கள் ஆறாம் பிரிவிலும் சக்தி பதிகங்கள் கொண்ட இரு தலங்களும் வீரபத்திரர், வைரவர் துதிகள் அடங்கிய மூன்று தலங்களும் ஏழாம் பிரிவிலும் அடங்கும். சிவபெருமான் துதிகள் மட்டும் பெற்றவையாக 63 தலங்கள் உள்ளன. இத்தலப் பாக்கள் சைவ அன்பர்களுக்குப் பெரும் விருந்தாகும். இத்தலங்கள் எட்டாம் பிரிவில் அமைந்துள்ளன. படைவீடாகச் சொல்லப்பெறாது, முருகப்பெருமான் துதிகள் பெற்ற தனித்த தலங்கள் ஒன்பதாம் பிரிவில் உள்ளன. (குறிப்பு: சில தலங்களில் பிற தெய்வப் பதிகங்கள் ஒன்றுக்கு மிகாமல் இருக்கும்)
திருத்தலங்கள்
| வ.எண் | வகைப்பாடு | தலங்கள் | # |
|---|---|---|---|
| அ | படை வீட்டுத் திருத்தலங்கள் | 34 | பதிவிறக்கம் |
| ஆ | திருவாமாத்தூர், திருநெல்வேலி, சிதம்பரம். திருவரங்கம் மற்றும் சென்னை | 5 | பதிவிறக்கம் |
| இ | சண்மதத் துதிகள் பெற்ற தலங்கள் | 44 | பதிவிறக்கம் |
| ஈ | சிவபெருமான் - திருமால் பதிகம் பெற்ற தலங்கள் | 9 | பதிவிறக்கம் |
| உ | திருமால் திருத்தலங்கள் | 16 | பதிவிறக்கம் |
| ஊ | கணபதித் திருத்தலங்கள் | 16 | பதிவிறக்கம் |
| எ | சக்தி, வீரபத்திரர், வைரவர் பாடல் பெற்ற தலங்கள் | 5 | பதிவிறக்கம் |
| ஏ | சிவபெருமான் திருத்தலங்கள் | 63 | பதிவிறக்கம் |
| ஐ | முருகப்பெருமானின் இதர தலங்கள் | 30 | பதிவிறக்கம் |
| மொத்தம் | 222 | ||
குருபாதமே கதி! முருகா சரணம்!
திருச்சிற்றம்பலம்
-அடியேன்
மருத்துவர் கோ.முரளிதரன்